கனமழையால் 100 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விபத்து

Author: kavin kumar
6 November 2021, 7:19 pm
Quick Share

கோவை: கோவையில் இன்று பெய்த கனமழையில் 100 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

கோவை புலியகுளம் பஜார் வீதியில் வசித்து வருபவர் ஆரோக்கியமேரி. இவருடன் கணவரை இழந்த மகள் ஆரோக்கியமேரி தனது மகள் ரூட்ஸ் மெர்லினுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலான மழை பெய்தது.இதில் ஆரோக்கியமேரி வசித்து வந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண் வீடு இடிந்து விழுந்தது.இதில் வீட்டில் இருந்த பொருட்களை முற்றிலும் சேதமடைந்தன. அதிர்ஷடவசமாக வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது.இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புலியகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வீட்டின் உள்ளே உள்ள மற்ற பொருட்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றது.

Views: - 113

0

0