11 மாவட்ட விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்: காவல்துறையினர் அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு..!!

Author: Aarthi Sivakumar
5 January 2022, 5:00 pm
Quick Share

தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ள நிலையில் பந்தல் அமைக்க கூட அனுமதி மறுத்து தமிழக காவல்துறை கெடுபிடி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் தொடர் மழை பெய்ததால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 11 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததோடு பந்தல் அமைக்கவும் தடை விதித்துள்ளனர். காவல்துறையின் தடையையும் மீறி தஞ்சையில் கொளுத்தும் வெயிலில் தரையில் ஆண்களும் பெண்களும் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஒரு வருடம் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டத்தை கொரோனாவை காரணம் காட்டி கொடுக்க நினைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசும் காவல்துறையும் எத்தனை தடை விதித்தாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 200

0

0