தருமபுரியில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவக்கம்

10 October 2020, 8:58 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவங்கப்படுகிறது. எஸ். 121 அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் ஏலகிரியான்கொட்டாய் நியாயவிலைக் கடையிலிருந்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஜீவாநகர் கிராமத்திற்குட்பட்ட 150 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வாகனம் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சென்று விநியோகிக்கப்படும்.

இந்த அம்மா நகரும் நியாயவிலைக் கடையானது ஜீவாநகர் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் அருகில் பிரதி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமை ஒரு நாள் மட்டும் செயல்படும். அம்மா நகரும் நியாயவிலைக்கடை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் குறிப்பிட்ட நாளில் பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதார்கள் இருப்பின் அவர்கள் பின்நாட்களில் தாய்க்கடையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலும் வகையில் இன்று தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இந்த அம்மா நகரும் நியாயவிலைக்கடையை துவக்கி வைத்தார்.

Views: - 31

0

0