புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் அறையில் 5 செல்போன்கள் பறிமுதல்

9 September 2020, 4:34 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் அறையில் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 3 விசாரணை கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் சுமார் ஒரு 120 விசாரணை கைதிகளும், 40 க்கு மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விசாரணை கைதிகள் அறையில் சிறை வார்டன்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது விசாரணை கைதிகள் பயன்படுத்தும் பாய், போர்வைக்குல் 5 சாம்சங் செல்போன்கள் மற்றும் பேட்டரிகள் மறைத்து வைத்திருந்த்தது கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கைதிகள் செல்போன் வைத்திருந்தது குறித்து சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் காலப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரை அடுத்து விசாரணை கைதிகளான சரண்ராஜ், ராஜசேகரன், சேது ஆகியோர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0