சென்னையில் நடன அழகிகள் 12 பேர் கைது: லஞ்சம் வாங்கி கொண்டு காவல் துறை அனுமதியுடன் நடப்பதாக குற்றச்சாட்டு

21 September 2020, 10:52 pm
Quick Share

சென்னை: கொளத்தூர் அருகே பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்த நடன அழகிகள் 12 பேரை போலீசார் கைது செய்து காப்பகத்தில் வைத்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் கடந்த 3 வருடமாக பென்ஸ் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சட்டத்துக்கு புறம்பாக நடனம் மற்றும் ஸ்பா , மதுபானம் என 12 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாக அண்ணா நகர் காவல் துறை துணை ஆணையர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அண்ணா நகர் துணை ஆணையர் சிறப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரை குறை உடைகளுடன் இளம் பெண்கள் நடனமாடியும் மற்றும் அறையில் உல்லாசமாக இருந்த போது காவல் துறையினர் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அழகிகளை கைது செய்த ராஜமங்கலம் போலீசார் பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் வைத்துள்ளனர். இது குறித்து மேலும் கிளப் அருகில் இருப்பவர்கள் கூறுகையில், இங்கு பல வருடங்களாக பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருகின்றனர். இது குறித்து பல முறை ராஜமங்கலம் காவல் துறைக்கு புகார் அளித்தும் எந்த வித பலனும் இல்லை என்று கொந்தளிக்கின்றனர் அக்கம் பக்கத்தினர். இது தொடர்பாக பைசல் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கார்த்திகேயன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.