அமமுகவினர் கொண்டு வந்த 12 லட்சம் மதிப்பிலான குக்கர்கள் பறிமுதல்…
27 February 2021, 7:59 pmஅரியலூர்: அரியலூர் அருகே அமமுகவினர் 2 லாரியில் கொண்டு வந்த 12 லட்சம் மதிப்பிலான குக்கர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் கும்மிடிபூண்டியில் இருந்து தஞ்சைக்கு 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ஒரு லாரி வெறும் பெட்டி என கூறி டிமிக்கு கொடுத்து கிளம்பி சென்றது. மற்றொரு லாரியை மறித்து விசாரணை மேற்கொண்டதில், அதில் குக்கர் இருப்பதும், அதில் தஞ்சை மாவட்ட அமமுகவினர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா என ஜெயலலிதா படம் மற்றும் டிடிவி தினகரன் படம் போட்டு கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து பறக்கும் படையினர் திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு லாரியை பறிமுதல் செய்ய உத்திரவிட்டனர். இதனை தொடர்ந்து இரண்டு லாரிகளையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இரண்டு லாரிகளிலும், 12 லட்சம் மதிப்பிலான 3 லிட்டர் குக்கர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 220 பொட்டிகளில் 3,520 எண்ணிக்கையிலான 3 லிட்டர் குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
0
0