126 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் பறிமுதல்: மளிகை கடை உரிமையாளர் சிறையில் அடைப்பு…

8 September 2020, 2:33 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே காரில் கடத்தி வரப்பட்ட 126 கிலோ புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆண்டார்மடம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரில் சோதனையிட்டனர். அப்போது அதில் 126 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து பிரபு என்பவரை கைது செய்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பழவேற்காட்டில் உள்ள தனது மளிகை கடையில் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர் விசாரணைக்கு பின்னர் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா, ஆன்ஸ், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0