12வது தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

29 March 2021, 3:28 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12வது தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தன் துப்பாக்கி சுடும் மையத்தில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 12வது தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் நடைபெற்றது இதில் ஆந்திரா கேரளா கர்நாடகா தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 65 துப்பாக்கி சுடும் வீரர்கள் பேர் பங்கேற்றனர். 76 மீட்டர் தூரத்தில் 140 கிமீட்டர் வேகம் செல்லும் இலக்கை துப்பாக்கியால் சுடும் போட்டி நடைபெற்றது. இதில் மூன்று பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டியானது நடைபெற்றது.

12வது தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் டிராப் பிரிவில் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த உமர் பின் ஜங்க் மற்றும் டபுள்டிராப் பிரிவில் ராஜகோபால் தொண்டைமான் மற்றும் ஸ்கீட் பிரிவில் சென்னையை சேர்ந்த காமராஜ் பால் ஆகிய மூவரும் தங்கம் வென்றனர். 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி வைக்கிங் நிறுவனத்தின் நிறுவன மேலாண்மை இயக்குனர் விஜய் ஆனந்த் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை மாநில அளவிலான போட்டியில் பெற்றார். நிலாபாலுராஜா பெண்கள் ஜீனியர் பிரிவில் தங்கமும் ராதாநிரஜ்சனி வெள்ளி பதக்கமும் வென்றனர்.

Views: - 9

0

0