பேருந்தில் வந்த பெண்மணியிடம் இருந்த 13 சவரன் தங்க நகை மாயம்
Author: kavin kumar27 August 2021, 1:27 pm
சென்னை: கோயம்பேட்டிலிருந்து கொடுங்கையூருக்கு பேருந்தில் வந்த பெண்மணியிடம் இருந்த 13 சவரன் தங்க நகை மாயம் சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் ரமா வயது 49. இவர் தனது உறவினர் திருமணத்திற்காக பண்ருட்டியில் இருந்து சென்னை கொடுங்கையூர் பகுதியில் நடைபெறும் திருமணத்திற்கு வந்ததாகவும் , கோயம்பேடு பகுதியில் இருந்து தடம் எண் 121 ஜி என்ற பேருந்தில் ஏறி கொடுங்கையூர் பகுதிக்கு வந்துள்ளார். கொடுங்கையூரில் இறங்கிய போது தனது கைப்பை கிழிந்த நிலையில் இருப்பதையும் அதில் இருந்த 13 சவரன் நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0