கடத்தப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள டயர்கள் மீட்பு: கடத்தப்பட்ட டயர்களை விலைக்கு வாங்கிய கடையின் உரிமையாளர் உட்பட 6 நபர்கள் கைது

Author: kavin kumar
18 August 2021, 11:33 pm
Quick Share

காஞ்சிபுரம்: வல்லம் பகுதியில் உள்ள கிடங்கிலிருந்து கடத்தப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள அப்போலோ நிறுவனத்தின் டயர்களை மீட்ட போலீசார், கடத்தப்பட்ட டயர்களை விலைக்கு வாங்கிய கடையின் உரிமையாளர் உட்பட 6 நபர்களை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் SVGL லாஜிஸிக்ஸ் என்ற கிடங்கி உள்ளது. இந்த கிடங்கில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அப்போலோ டயர் கம்பெனி யின் 105 டயர்கள் கடத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் மேலாளர் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.ஸ்ரீபெரும்புதூர் கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஒரு தனிப்படையும் ,ஒரகடம் காவல் ஆய்வாளர் சுரேந்திரன் குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கிடங்கில் பணிபுரிந்த பிரேம் மற்றும் அவருடைய மாமா லியோ பவுல் ராஜ் ஆகியோர் சேர்ந்து லாரி ஓட்டுனர் ரஹீம் மூலமாக டயர்களை கடத்தப்பட்டது தெரிய வந்தது.

கடத்தப்பட்ட டயர்களை ராணிப்பேட்டை மற்றும் வேலூர் பகுதியில் உள்ள டயர் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் ஜாகீர் மற்றும் தஸ்தாகீர் ஆகியோர் வாங்கியதை கண்டறிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் SVGL நிறுவனத்தில் வேலை செய்த லியோ பவுல்ராஜ் தன்னுடைய மைத்துனர் பிரேம் மற்றும் லிங்கேஸ்வரன் மூலம் கடத்தி ஓட்டுனர் ரகீமிடம் ராணிப்பேட்டையில் விற்க கூறி உள்ளனர். சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயர்களை வாங்கிய ஜாபர், தஸ்தகீர் ஆகியோர் உட்பட ஆறு நபர்களை ஒரகடம் காவல்துறையினர் கைது செய்து கடத்தப்பட்ட டயர்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே குடோனில் இருந்து சுமார் 3750 டயர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு வேலை செய்த லியோ பவுல்ராஜ் அப்போது பணியிலிருந்து நீக்கப்பட்டார். இவருடைய மைத்துனர் பிரேம் SVGL நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதனால் 105 டயர்கள் மீண்டும் தற்போது கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 198

0

0