15 வயது சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை

26 November 2020, 8:34 pm
Quick Share

நீலகிரி: வாழைத்தோட்டம் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்தி குகை கோவிலில் வைத்து திருமணம் செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்ட கிராமத்தைச் சேர்ந்த தேன் குறும்பர் பழங்குடியின இளைஞன் ஈஸ்வரன் வயது 22,  இவர் அதே கிராமத்தில் உள்ள 15 வயது சிறுமியை கடத்திச் சென்று மசினகுடி அருகே உள்ள கல்குவாரி பகுதியில் குகைகோவிலில் வைத்து வற்புறுத்தி தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் கூடலூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மசினகுடி அருகே உள்ள கல்குவாரியில் சிறுமியை மீட்டு, இளைஞரை கைது செய்தனர்.

இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சிறுமியை கடத்திச் சென்றதற்காக இளைஞனுக்கு மூன்றாண்டு கால சிறைத் தண்டனையும், சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்ததற்காக 1 ஆண்டுகால சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகால சிறை தண்டனையும் என தனிப் பிரிவுகளின் கீழ் ஏககாலமாக பத்தாண்டு கால சிறை தண்டனையை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் வழங்கினார். பின்பு குற்றவாளியை காவல்துறையினர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0