7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் கைது

21 July 2021, 2:58 pm
Quick Share

அரியலூர்: கீழப்பழூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக 20க்கும் மேற்பட்ட தடவை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதேபோல் சிறுவன் நேற்று இரவு அவர்கள் வீட்டின் திண்ணையில் பாலியல் தொல்லை கொடுத்து போது சிறுமியின் அத்தை பார்த்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் விபரத்தை கேட்டபோது முதலில் சொல்ல பயந்த சிறுமி பின்னர் நடந்ததை கூறியுள்ளது. இதனையடுத்து கீழப்பழூர் போலீசில் புகார் அளிக்கபட்டதையடுத்து போலீசார் அந்த 17 வயது சிறுவனை கைது செய்து பின்னர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமானூர் அருகே இதுபோன்ற சம்பவம் நடைப்பெற்றது குறிப்பிடதக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களிலும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊர் பெயரையோ, மற்ற விபரங்களையோ பதிவிட வேண்டாம் என கேட்டு கொள்ளபட்டதையடுத்து மறைக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 93

0

0