இரு வேறு திருட்டுச் சம்பவங்களில் 18 பவுன் நகை திருட்டு: 4 லட்சம் ரொக்கம் கொள்ளை

29 November 2020, 7:18 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே நடைபெற்ற இரு வேறு திருட்டுச் சம்பவங்களில் 18 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இப்பகுதியில் உள்ள NGGO காலனியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் தாராபுரம் நகர் பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 18 பவுன் மற்றும் 20 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மஞ்சுளா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக தேனி சென்றுவிட்டு மீண்டும் காங்கேயம் செல்வதற்காக தேனியிலிருந்து தாராபுரத்தில் வந்தார்.

அப்போது தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி காங்கேயம் பேருந்து ஏறும் போது அவர் கையில், வைத்திருந்த 3.50 லட்சம் மதிப்புள்ள பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுபற்றி தாராபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பட்டினத்தைச் சேர்ந்த மஞ்சுளா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தாராபுரம் பகுதியில் இன்று ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களில் 18 பவுன் நகை மற்றும் 4 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளை போனது தாராபுரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0