2.35 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல்…

10 September 2020, 6:47 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ரூபாய் 2.35 லட்சம் மதிப்பிலான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருந்திரிகள் மூட்டைகளை அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பட்டாசு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரியை வீடுகளில் தயாரிக்ககவும் வீடுகளில் வைத்து இருக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான சின்ன புளியம்பட்டி தெற்கு தெரு சொக்களிங்கபுரம் போன்ற பகுதிகளில் வீடுகளில் கருந்திரி மேல் பேப்பர் சுற்றும் தொழிலை சட்டவிரோதமாக வீட்டில் செய்து வருவதாககாவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், சொக்களிங்கபுரம் பகுதிகளில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,35,000 ரூபாய் மதிப்பிலான கருந்திரிகளை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0