இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது: 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

30 November 2020, 7:17 pm
Quick Share

சென்னை: வடசென்னை பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருடந்த 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் கீர்த்திவாசன். இவர் கடந்த 6 ம் தேதி இரு சக்கர வாகனத்தில், அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை மடக்கிய மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஆனந்தன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் அந்த பகுதியில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில்,

ஏற்கனவே திருட்டு வழக்கில் ஈடுபட்டிருந்த  நபர் தான் இந்த சம்பவத்திலும  ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (எ) எச்சைமணி   21  என்பவரை பிடித்து விசாரித்ததில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பரான எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த லிங்க பெருமாள் என்ற நபருடன் சேர்ந்து பல இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டார் .

இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார் லிங்க பெருமாளை கைது செய்து அவரையும், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில்,  இருவரும் சேர்ந்து இதுவரை வடசென்னையில் 12 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கொடுங்கையூர் போலீசார் மணிகண்டன் மற்றும் லிங்க பெருமாளை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 15

0

0