தாமரைக் குளத்தில் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

6 August 2020, 8:23 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமரைக்குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் திருப்புக்குழி பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார் இவருடைய மகன் ஜெகத்பிரியன்(8). அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். அதே போல் திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்தவர் சோமு. இவர் சோமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய மகன் சுஜன் .வயது 11 அருகே உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் .

சுஜன் மற்றும் ஜகத் பிரியன் ஆகிய இருவரும் திருப்புக்குழி பகுதியில் உள்ள தாமரைகுளத்தில் (மீன் பிடித்தபடியே ) குளிக்க சென்றனர். குளத்தில் சேறு அதிகமாக இருந்ததால் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அச்சிறுவர்களது சடலங்களையும் மீட்டுனர். கொரோனா மாற்றம் ஊரடங்கு சட்டம் உள்ளதால் 2 மாணவர்களையும் தத்தமது பகுதிகளிலேயே அடக்கம் செய்வதாக கூறி விட்டதால் பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் முசரவாக்கம் மட்டும் திருப்புகுழி கிராமங்களில் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

Views: - 9

0

0