கிணற்று நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஒரு மணி நேரம் போராடி உடல்கள் மீட்பு
22 August 2020, 9:58 pmகிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே விவசாய கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள கோடால வலசை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஆனந்தி (13). அதே பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகள் ராதிகா (13). இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுட்டனர்.
இருந்தபோதிலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிராம மக்களின் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.