திருச்சி சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற 2 பேர் கவலைக்கிடம்: வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

Author: kavin kumar
20 August 2021, 11:48 pm
Quick Share

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் 70க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இலங்கை தமிழர்கள் தாங்கள் விடுதலை பெற்று இதுவரை விடுதலை செய்யவில்லை எனக் கூறி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் 3வாரத்தில் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்துச் சென்றனர்.

ஆனால் விடுதலை தொடர்பாக எந்தவித முயற்சியும் அதிகாரிகள் எடுத்ததாக இல்லை என்பதை அறிந்து நிரூபன், முகுந்தன் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தங்களது கழுத்து மற்றும் வயிற்றை கிழித்துக்கொண்டனர். மேலும் 12 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றனர்.

மொத்தம் 16 பேர் சிறை முகாமில் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், மருத்துவக் குழுவினர் இன்று சோதனை மேற்கொண்ட போது நிரூபன், முகுந்தன் ஆகிய இருவருக்கும் இருதயத் துடிப்பு, 50க்கும் கீழாக குறைந்த நிலையில், இருவரும் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் இருப்பதை கண்டனர். உடனடியாக இருவரையும் மருத்துவக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டனர்.

அதையடுத்து, காவல்துறையின் உதவியுடன் இருவரும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்க மருத்துவமனைக்கு சென்றாலும், ‘விடுதலை அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் என்பதே தங்களது நிலைப்பாடு’ என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 12 பேரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Views: - 204

0

0