மதுரையில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்பு…

Author: Udhayakumar Raman
24 September 2021, 3:57 pm
Quick Share

மதுரை: மதுரை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் செயலை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகிய துறைகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மதுரை மாநகரில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை மீட்கும் பணியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர், மதுரை மாநகர காவல்துறையுடன் இணைந்து இன்று மதுரை ரயில் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், காளவாசல் சந்திப்பு, தெப்பக்குளம் , மேலமடை சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சூழலில் மதுரை முழுவதும் உள்ள சிக்னல்களில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மதுரை மாநகரில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்த குழந்தைகளா அல்லது திருடியோ, கடத்தி வரப்பட்டு விலைக்கு வாங்கப்பட்ட குழந்தைகளா என்று பிச்சையெடுக்க வைத்த நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தைகள் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களை வைத்து பிச்சை எடுப்பது போக்குவரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுவதாக தொடர்ந்து அதிகரித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

Views: - 123

0

0