குமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் .! கேரள கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் ;

28 February 2021, 5:55 pm
Quick Share

கன்னியாகுமரி: அருமனை அருகே நின்று கொண்டிருந்த டெம்போவில் இருந்த 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனனர்.

குமரி மாவட்டம் அருமனை அருகே அண்டுகோடு மயில்லட்சி பகுதியில் சந்தேகப்படும்படியாக டெம்போ ஒன்று நின்று கொண்டிருப்பதாக அருமணை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு நின்று கொண்டிருந்த டெம்போவை போலீசார் சோதனை செய்தனர் .அதில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் சாக்கு மூடைகளை சோதனை செய்த போது அதற்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

டெம்போவில் இருந்த 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு ரூ 50 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது . தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ கேரளாவை சேர்ந்த ஒருவர் உடையது என்பது தெரியவந்துள்ளது. எனவே கேரளாவில் இருந்து தான் கஞ்சாவை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1

0

0