2021 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம்

6 November 2020, 8:51 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் 2021 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டத்தில் அரசு மருத்துவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை குழுவிடம் தெரிவித்தனர்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியின் ஒருங்கிணைப்பாளர் டி. ஆர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன், சுப்புலட்சுமி ஜகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள்,வணிகர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள் சங்கத்தினர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, குழவிடம் வழங்கி, தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேசிய அதன் தலைவர் ராம கவுண்டர், வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ராபின் தியோடர் பேசும்போது, ஆசிரியர்களின் தொகுப்பு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை குழுவிடம் தெரிவித்தனர்.

Views: - 15

0

0