கொடுங்கையூரில் 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
Author: kavin kumar18 August 2021, 7:56 pm
சென்னை: கொடுங்கையூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 2 ஆயிரத்து 500 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிக்னல் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி லாரியை குடிமைப் பொருள் குற்றப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது அதில் 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த கானாத்தூர் பகுதியைச் சேர்ந்த மெபத் ஷா 38 என்ற நபரை கைது செய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ரேஷன் அரிசி கடத்தலில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தவுலத் 48 என்ற பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும் இவர்கள் வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை ஆந்திராவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் மெபத்ஷா மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தவுலத்தை தேடி வருகின்றனர்.
0
0