வங்கியில் செலுத்திய பணத்தில் 26ஆயிரத்து 800 ரூபாய் கள்ளநோட்டுகள்: வங்கி மேலாளர் புகார்

21 January 2021, 10:37 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றத்தில் தனியார் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தில் 26ஆயிரத்து 800 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததால் வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள தனியார் எச்சிடிஎப்சி வங்கியில் திருவொற்றியூரை சேர்ந்த விஜயலட்சுமி மணவாளன் என்பவர் 1,29, 000ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தியதில் 26,800 ரூபாய் கள்ளநோட்டுக்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க கோரி வங்கி மேலாளர் ரவி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பணத்தை செலுத்தி விட்டு அவர் சென்றிருந்த நிலையில்,கள்ள நோட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளதால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு எப்படி வந்தது என்பது குறித்தும், தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தில் கள்ளநோட்டு இருந்தது கண்டறியப்பட்டது வங்கி ஊழியர்களிடமும் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0