புதுச்சேரியில் 23 ஆயிரத்தை கடந்த கொரோனா: ஒரே நாளில் 273 நபர்களுக்கு கொரோனா

21 September 2020, 6:37 pm
TN Corona 5 Districts- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 273 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 273 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

அதில் புதுச்சேரியில் 214 நபர்களுக்கும், காரைக்காலில் 44 நபர்களுக்கும், ஏனாமில் 8 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,659 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,065 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 6 நபர்களும், காரைக்காலில் 1, ஏனாமில் 2 நபர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23,191 ஆக உயர்ந்துள்ளது.