புதுச்சேரியில் புதிதாக 287 நபர்களுக்கு கொரோனா

Author: Udayaraman
16 October 2020, 2:41 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 287 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 236 நபர்களுக்கும், காரைக்காலில் 28 நபர்களுக்கும், ஏனாமில் 16 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4524 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 27671 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 1 நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 32766 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 30

0

0