சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 3.26 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

20 November 2020, 8:37 pm
Quick Share

கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 3.26 கோடி ரூபாய் தங்கத்தை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் தீபாவளி அன்று புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் ஏர் அரேபியா விமானம் G-9 413 விமானம் மூலம் வந்த பயனிகளை கண்காணித்தனர். அப்போ கேரளா மாநிலம் காசர்கோடு, சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த பதினோறு பேரிடம் தங்கம் கொண்டு வரப்படுகிறதா? என விசாரணை மேற்கொண்டபோது இல்லை என மறுத்து உள்ளனர். அவர்களது செயல்கள் முன்னுக்கு பின் முரணான பேச்சால் சந்தேகம் அடைந்த புலனாய்ய் அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது உள்ளாடைகளில் பசை வடிவத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கமும் ஆசனவாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1 கிலோ தங்கமும் என 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யபட்டது. பறிமுதல் செய்யபட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 3.26 கோடி ரூபாய் என வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் இவர்கள் கொண்டு வந்த சிகரெட், ஐ போன், மற்றும் டிரோன் ஆகியன பறிமுதல் செய்யபட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பதினோறு பேர் கைது செய்யபட்டு பின்னர் விடுவிக்கபட்டனர்.

தங்க கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், இந்த மாதம் இரண்டாவது முறையாக தங்க கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அதிக அளவிலான கடத்தல் பொருட்களை கைபற்றபட்டு உள்ளதாக வருவாய்புலனாய்வு பிரிவு அலுவலகம் மூலம் அறிக்கை கொடுக்கபட்டு உள்ளது.

Views: - 0

0

0