பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

Author: Udayaraman
10 October 2020, 10:24 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஊத்துக்கோட்டை வெங்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் பெரியபாளையம் போலீசார் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், செங்காத்த குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் போது நாகராஜ் ராஜ்குமார் பூவரசன் மூன்று பேரும் திருட்டுஇருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்து பல்வேறு இடங்களில் திருடிய 25 வாகனங்களை ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சாரதி மற்றும் வெங்கல் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டு பின்னர் உரிமையாளரிடம் வாகனம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் இருசக்கர வாகனத் திருட்டு கும்பலை விரைவாக கைது செய்து 25 வாகனங்களை பறிமுதல் செய்த நடவடிக்கைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பாராட்டு தெரிவித்தார்.

Views: - 31

0

0