நடை பயிற்சி மேற்கொண்ட தம்பதியினரிடம் தங்கச் சங்கிலியை பறித்த 3 பேர் கைது
1 December 2020, 9:43 pmசென்னை: சென்னையில் நடைப் பயிற்சி மேற்கொண்ட தம்பதியனரிடம் 7 சவரன் தங்க சங்கிலியை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் பி.பி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மனைவி சுபாஷினி இவர்கள் பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு வழியாக நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணியாத 3 நபர்கள் சுபாஷினி கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.
இது குறித்து சுபாஷினி மற்றும் அவரது கணவர் இருவரும் செம்பியம் குற்றப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளின் புகைப்படங்களை எடுத்தனர் இதனை அடுத்து புளியந்தோப்பு பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒரு திருடன் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற நபரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களால் நேற்று கொள்ளையடிக்கபட்ட 7 சவரன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 3 பேரிடமும் செம்பியம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
0
0