கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

17 October 2020, 8:47 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியுடன் சுற்றி திரிந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 3 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை எம்.கே.பி நகர் போலீசார் முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 3 நபர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்து விசாரித்த போது அவர்களிம் இருந்து 3 கத்திகள் இருந்தன. இதனையெடுத்து அவர்களை எம்.கே.பி நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் (எ) முல்லை ரமேஷ், பிரதீப் குமார், ஜான்சன் என்பது தெரிய வந்தது. வியாசர்பாடியில் உள்ள ஒரு ரவுடியை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி கத்தியுடன் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

Views: - 16

0

0