60ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய 3 நபர்கள் கைது

8 July 2021, 7:31 pm
Quick Share

ஈரோடு: மூலப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சொந்தமான 60ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய 3 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சொந்தமான மது பாட்டில்கள் வைத்திருந்த கட்டிடத்தின் மேற்கூரையை மர்ம நபர்கள் சிலர் கடந்த 6 ம் தேதி இரவு உடைத்து 60ஆயிரம் மதிப்புள்ள 304 மதுபாட்டில்களை கொள்ளையடித்த சம்பவம் குறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுதாகர் அளித்த புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஷேக் பரீத், காஜா முகைனுதீன் மற்றும் சஞ்சய் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

Views: - 186

0

0