கத்தியை காட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது…

13 August 2020, 5:06 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் துணி கடை மற்றும் கறிக்கடையில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாலையோர துணி கடை ஒன்றிற்கு வந்த 3 பேர் 750 ரூபாய்க்கு துணிகள் எடுத்து விட்டு செல்ல முயன்றனர். அப்போது அந்த கடையின் உரிமையாளர் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அதே போல் இவர்கள் கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கறிகடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம் கத்தியை காண்பித்து ரூபாய் 500 பணத்தை பிடுங்கிக் சென்றுள்ளனர்.

தொடர் பணம் பறிப்பில் ஈடுப்பட்ட கும்பலை குறித்து லாஸபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து லாஸ்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த கார்த்தி என்ற மணிவண்ணன், கண்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் என தெரிய வந்ததை அடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Views: - 10

0

0