கோவையில் குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு…

Author: kavin kumar
28 October 2021, 10:16 pm
Quick Share

கோவை: சூலூர் முதலிபாளையத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் உடல்களை சூலூர் காவல் துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் முதலிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 25 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இதில் சமீபத்தில் பெய்த மழைக்கு சுமார் 6 உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதில் அதே ஊரைச் சேர்ந்த மேற்கு வீதி அன்பு என்பவரின் மகன் சதீஷ்குமார்(14), பட்டத்தரசியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் பூபதி(14) மற்றும் சுரேஷ் என்பவரது மகன் சபரிவாசன்(12) ஆகிய மூவரும் காலை விளையாடச் சென்றுள்ளனர். மூவரும் அரசூர் அரசுப்பள்ளயில் 6 ம் வகுப்பு, 7வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு படித்து வருகின்றனர். காலை 10 மணிக்கு குட்டைக்கு சென்றவர்கள், மாலையாகியும் வீடு திரும்பாத்தால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடி குட்டைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது கரையில் மூன்று பேரின் துணிகள் மற்றும் செருப்பு இருந்த நிலையில், சிறுவர்களைக் காணாததால், சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞர்கள் குட்டையில் இறங்கி தேடியபோது சிறுவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் காவல் துறையினர் உடலை மீட்டு, சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 177

0

0