திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 3 கோடி தங்கம்: தங்க கடத்தலுக்கு துணை போன அதிகாரி சிக்கியதாக தகவல்

20 July 2021, 2:48 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரி அதிரடி சோதனையில் 3கோடி தங்கம் சிக்கியது.

திருச்சி விமான நிலையம் வழியாக கடந்த சில மாதங்களாக அதிகளவு தங்கம் கடத்தி வருவது குறித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நேற்று முன் தினம் இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்ஜா விமானத்தில் வந்த மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, பரமக்குடி ஆகிய பகுதியை சேர்ந்த 4பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்த போது அதில், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 290 கிராம் தங்கம் கடத்தி வந்தது தொிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் துறை அதிகாரிகள் அவர்கள் 4பேரிடமும் விசாரணை நடத்திய போது,

விமான நிலையத்திற்கு வௌியில் தங்கத்தை வாங்க காத்திருந்து ஏஜென்டுகள் 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தங்க கடத்தலுக்கு உதவி செய்து வரும் திருச்சி விமான நிலையத்திலுள்ள சுங்கத்துறையினர் யார் என்பது குறித்தும், அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Views: - 93

0

0