புலிகள் கணக்கொடுப்பது குறித்த 3 நாள் கருத்தரங்கம் தொடக்கம்

Author: kavin kumar
7 August 2021, 6:31 pm
Quick Share

நீலகிரி: தென் இந்தியாவில் உள்ள ஆறு மாநில  வனத்துறை புலிகள் காப்பக கள இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்க்கான புலிகள் கணக்கொடுப்பது குறித்த 3 நாள் கருத்தரங்கம் முதுமலை புலிகள் காப்பகத்தில் துவங்கியது.இதில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலகளவில் அழியும் நிலையில் உள்ள புலி இனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1973-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புலிகளை அழிவின் பிடியில் இருந்து மீட்க 2010 -ம் ஆண்டு ரஷ்யாவில் இந்தியா உட்பட 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் ஜூலை 29 ஆம் தேதி தேசிய புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்பு நடைப்பெற்று வருகிறது. அதன் படி இந்திய நாட்டின் தேசிய விலங்காக உள்ள புலி 2000ம் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 1700 ஆக இருந்தது. ஆயிரணக்கான புலிகள் வேட்டையாடபட்டன.

இதனால் தேசிய விலங்கான புலியை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து பல வன பகுதிகளை புலிகள் சரணாலயமாக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2967 ஆக உள்ளது. தற்போது தமிழகத்தின் புலிகளின் எண்ணிக்கை சுமார் 260 -கும் மேற்ப்பட்ட புலிகள் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு  புலிகள் கணக்கெடுப்பு நடைப்பெற்றது. இதனையடுத்து இந்திய அலவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2021 -ம் ஆண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி தென்ந்தியாவில் உள்ள புலிகள் காப்பக 90 கள இயக்குனர்கள் மற்றும் துணை கள இயக்குனர்களுக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் துவங்கியது.

3 நாள் நடைப்பெற்றும் இந்த பயிற்சி கூட்த்தில் புலிகளை எவ்வாறு கணக்கெடுப்பது குறித்தும், இதற்கான கருவிகளை கையாலுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு  யானைகள் முகாமிலுள்ள அரங்கில்  உள்ள இந்த பயிற்சி கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, உள்ளிட்ட பல்வேறு புலிகள் காப்பகத்தை சேர்ந்த 90 அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மூன்று நாட்கள் எவ்வாறு புலிகள் கணக்கெடுப்பு நடத்துவது புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிவது  குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 137

0

0