கஞ்சா போதையில் கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது

2 February 2021, 5:52 am
Quick Share

சென்னை: புளியந்தோப்பு அருகே கஞ்சா போதையில் கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர் 2 வது தெருவில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் முழு கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்த  இரண்டு கத்திகள்  பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், புளியந்தோ்ப்பு  பகுதியைச் சேர்ந்த ரீகன் என்கின்ற சந்தோஷ், அதே பகுதியை சேர்ந்த ஜீவா மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரிய வந்தது.

இதில் ரீகன் மற்றும் ஜீவா ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதும், மூன்று பேரும் ஒன்று கூடி  கஞ்சா புகைத்து கொண்டு முன் விரோதம் காரணமாக வேறு ஒருவரை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக தெரியவந்ததையடுத்து 3 பேரையும் கைது செய்து புளியந்தோப்பு போலீசார் அவர்களிடம்  இருந்து 2 கத்திகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0