திருச்சி சிறப்பு முகாமில் தப்பிய வெளிநாட்டு கைதியை பிடிக்க 3 தனிப்படைகள்: லூக் அவுட் நோடீஸ் வெளியிட்ட போலீசார்

Author: Udhayakumar Raman
3 September 2021, 7:58 pm
Quick Share

திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் தப்பிய வெளிநாட்டு கைதியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்தியச் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இலியன் டிரகோவ் மார்க்கோவ் தப்பிச் சென்றார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தப்பிச் சென்ற பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இலியன் டிரகோவ் மார்க்கோவ், தேடப்படும் குற்றவாளியாக திருச்சி மாநகர காவல்துறை அறிவித்து ‘லுக்அவுட் நோட்டீஸ்’ வெளியிட்டது.மேலும், மார்க்கோவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது . அமைக்கப்பட்டுள்ள தனிப்படை காவல்துறை அதிகாரிகள் தற்போது பெங்களூரு மற்றும் கேரளாவில் முகாமிட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Views: - 117

0

0