வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 ஆயிரம் வாத்துகள்

27 November 2020, 2:05 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாலாற்று படுக்கையில் கூடாரம் வைத்து வளர்த்து வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் கானாற்றின் வெள்ளம் காரணமாக அடித்துச்செல்லப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மசிகம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவர் பல ஆண்டுகளாக பச்சகுப்பம் பாலாற்று படுக்கையில் கூடாரம் அமைத்து 5 வாத்து வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாத்துக்குஞ்சுகளை பாலாற்று கரையோரம் கூடாரம் அமைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை பெய்ததையடுத்து காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பெத்தப்பல்லி காட்டாற்றில் அதிக அளவு வெள்ளம் ஏற்ப்பட்டு பாலாற்றில் கலப்பதற்காக காட்டாறு வெள்ளம் வந்த போது பாலாற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த வாத்துகுடிலை வெள்ளம் அடித்துச்சென்றது. இந்நிலையில் நள்ளிரவில் செய்தறியதா தொழிலாளர்கள் உடனடியாக வெள்ளத்திலிருந்து தப்பிக்க நிலப்பகுதிகளுக்கு தப்பி ஓடியுள்ளனர். இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாத்து குஞ்சுகள் காட்டாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் தங்களுக்கு 1 லட்சம் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாக வாத்து குடில் அமைத்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Views: - 12

0

0