தீயில் கருகிய 300 நெல் மூட்டைகள்: வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை

12 July 2021, 6:27 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விவசாயி குடோனில் சேமித்து வைத்திருந்த 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 300 நெல் மூட்டைகள் தீயில் கருகியது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் இலவம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாபு. இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்து அறுவடை செய்த 600 நெல்மூட்டைகளை உத்தண்டி கண்டிகை கிராமத்தில் நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை குடோனில் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருந்த நிலையில் குடோனில் திடீரென இன்று தீப்பிடித்து எரிந்து புகை வெளியேறியதை பார்த்த அப்பகுதிமக்கள் உடனடியாக பொன்னேரி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொன்னேரி வருவாய்த்துறையினர் அனுப்பம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் டேவிட் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்தில் விவசாயி பாபுவின் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் கருகி நாசம் ஆகியதால் பாதிக்கப்பட்ட அவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Views: - 44

0

0