தடுப்பூசியை கூட விட்டுவைக்காத திருடர்கள்: ராஜஸ்தானில் 320 டோஸ் கொரோனா தடுப்பூசி மாயம்..!!

15 April 2021, 9:30 am
corona_vaccine_shortage_updatenews360
Quick Share

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மருத்துவமனையில் 320 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கன்வாடியா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கோவேக்சின் தடுப்பூசி தொகுப்பில் இருந்து 32 குப்பிகள் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு குப்பியில் 10 டோஸ் வீதம் மொத்தம் 320 டோஸ்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது மாநில சுகாதாரத்துறை வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி அதிகாரி நரோட்டம் சர்மா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக மாநில காங்கிரஸ் அரசுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Views: - 9

0

0