திருச்சியில் இதுவரை 3,26,326 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

1 June 2021, 8:32 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை 3,26,326 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி பற்றாக்குறையால் 18 முதல் 44 வயது பிரிவினருக்கான சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரானோ தொற்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தடுப்புசி பணியை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பு குறைந்துவிட்டதால் 18 முதல்
44வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 3-ந்தேதி முதல் 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை மாநில செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கியவர்கள் இறப்புகள் அதிகரித்தால் கடந்த இரு வாரங்களாக தடுப்பூசி அதிக அளவில் செலுத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட எண்ணிக்கை
64ஆயிரத்து 848 பேர் ஆகும். இதுவரை திருச்சி மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 26ஆயிரத்து 326 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையால் 18 முதல் 44 வயது பிரிவினருக்கான சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்த பின்னரே மீண்டும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 79

0

0