27 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 372 நபர்களுக்கு கொரோனா தொற்று

27 September 2020, 2:59 pm
corona virus new4- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 372 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 26400 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 372 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

அதில் புதுச்சேரியில் 270 நபர்களுக்கும், காரைக்காலில் 72 நபர்களுக்கும், ஏனாமில் 11, நபர்களுக்கும் மாஹேவில் 19 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,239 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,648 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 10 நபர்களும், காரைக்காலில் 3 நபர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26400 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 9

0

0