திருமண மண்டப அதிபரை தாக்கிய 4 பேர் கைது: முன் விரோதத்தில் தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம்

14 July 2021, 3:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண மண்டப அதிபரை தாக்கிய 4 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி தவலகுப்பம் பகுதியை சேர்ந்தவரகள் எழில்ராஜா மற்றும் அவரது மகன் ரங்கநாதன், இவர்கள் சொந்தமாக புதுச்சேரி கடலூர் சாலையில் திருமண மண்டபம் வைத்துள்ளனர், இந்நிலையில் ரங்கநாதன் நேற்று திருமண மண்டபம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே வந்த வாலிபர்கள் சிலர் அவரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து ரங்கநாதன் தவளகுப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் போலீசார் ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிங்கிரி கோயில் பகுதியை சேர்ந்த மகேஷ், பிரசாந்த், உதயா, பிரவின் தான் ராங்கநாதனை தாக்கியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 11 ம் தேதி தங்களின் நண்பரின் குழந்தை பிறந்தநாள் விழாவை கல்யாண மண்டபத்தில் கொண்டாடியபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மறுநாள் எடுத்து செல்லும் போது கிழிந்திருந்த காரணத்தினால் ஆத்திரத்தில் அவர்கள் ரங்கநாதனை தாக்கியதாக ஒப்புகொண்டுள்ளனர். இதனை அடுத்து கைது செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர்.

Views: - 290

0

0