கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது…

4 August 2020, 6:35 pm
crime_arrest_updatenews360
Quick Share

திருவாரூர்: மன்னார்குடியில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் லாட்டரிகள் மூலம் பல கூலிதொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறைமுக விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்ட போது சந்தோகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டு வருவதும், அதே பகுதியே சேர்ந்த மாரிமுத்து (41), நிஜந்தன் (32), முரளி (31), கென்னடி (41) ஆகியோர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் ஆட்டோவை காவல் துறையினர் பறிமுதல் செய்ததனர். மேலும் தப்பியோடிய கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 5

0

0