4 லட்சம் ரூபாய் மதிப்பில் திருடுபோன ஆடு, மாடுகள் கண்டுபிடிப்பு: குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்கள்

Author: Udayaraman
28 July 2021, 9:33 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் திருடுபோன ஆடு, மாடுகளை போலீசார் கண்டுபிடித்து திருடிச் சென்ற நபர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வடகரை அருகே உள்ள மங்கான் ஏரி பகுதியில் இன்று விடியற்காலை ராஜதுரை, கிருஷ்ணன், லாசர்ஸ், செண்பகம், சேட்டு ஆகியோரின் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான ஆடு மாடுகள் காணாமல் போனதாக தெரிவித்து அதன் உரிமையாளர்கள் விவசாய நிலங்கள், ஏரி, காடுகள் என பல இடங்களில் தேடிவந்தனர். இந்தநிலையில் கோபிநாதம்பட்டி பகுதியில் உள்ள சந்தையில் வாரம்தோறும் ஆடு மாடு கோழி விற்பனை நடப்பது வழக்கம். காணமல் போன ஆடு மாடுகள் இன்று நடைபெறும் சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என என்னி அதன் உரிமையாளர்கள் சந்தேகமடைந்ததை அடுத்து சந்தைக்கு சென்று கண்கானித்தனர்.

அப்போது காணமல் போன ஆடு, மாடுகள் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், திருடி சென்ற நபர்களை கையும் களவுமாக பிடித்து கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி நந்தினி மற்றும் தரகர்கள் 3 பேரை விசாரனை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் 3 நபர்கள் இருப்பதாகவும், அவர்களை பிடிக்கச்செல்லும் போது தப்பியோடி விட்டதாக மாட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த கிராமத்தில் கடந்த ஆறு மாதமாக ஆடு மாடுகள், மற்றும் வாகன பேட்டரிகள் காணாமல் போனதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Views: - 152

0

0