இந்தியன் புக் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்ற 4 வயது பெண் குழந்தை

21 November 2020, 9:46 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரத்தை சேர்ந்த மித்ரா என்ற 4 வயது பெண் குழந்தை இந்தியன் புக் ரெக்காட்ஸ் ல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மைனர் ராமநாதன் தெருவில் வசிக்கும் சுகுமாரன் சரண்யா தம்பதியரின் நான்கு வயது மகள் மித்ரா என்கிற பெண் குழந்தை நாடுகளின் பெயர் அவற்றின் தலைநகரம், பூக்களின் பெயர், கிரகங்களின் பெயர் மற்றும் வண்னங்கள் உள்ளிட்ட நான்காயிரம் பெயர்களை மனப்பாடமாக சொல்லி இந்தியா புக் ஆப் ரெக்கட்ஸ் இடம் பெற்று அசத்தியுள்ளது.

நான்கு வயதே ஆன பெண் குழந்தை தாராபுரம் தனியார் பள்ளியில் LKG படித்து வரும் நிலையில், இப்பொழது கொரோனா தடை நீட்டிப்பால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே படித்து இந்த சாதனையை நிகழ்த்தியது அவரது பெற்றோர்கள் மட்டும் இல்லாமல் தாராபுரம் மக்களிடையேயும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Views: - 15

0

0