குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு

26 January 2021, 7:21 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையில் உள்ளது நல்லத்தண்ணீர் குளம். இந்த குளத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவரது இரண்டு குழந்தைகள் சையது தமீம்(4) சையது ஹமீம்(6) ஆகிய இருவரும் குளத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததை அடுத்து, குழந்தையின் பெற்றோர் குளத்தின் அருகே சென்று பார்த்துள்ளனர். பின்னர், சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி பார்த்தபோது குலத்தில் இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இருவரையும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில்,சையது தமீம் இறந்துவிட, சையது ஹமீம் என்கிற சிறவன் உயர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு குழந்தை இறந்துவிட, மற்றொரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0