40 லிட்டர் கேரளா மாநில மதுபானம் பறிமுதல்: ஓட்டுனரை கைது செய்து விசாரணை

22 June 2021, 4:31 pm
Quick Share

நீலகிரி : உதகையில் தனிபடை போலீசார் நடத்திய வாகன சோதனையில் 40 லிட்டர் கேரளா மாநில மதுபானம் பிடிபட்டது. மேலும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனரையும் கைது செய்தனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் அரசு மதுபான கடைகள் மூடபட்டுள்ளன. இதனால் கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து மதுபானங்கள் காய்கறி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கடத்தி வரபட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது. இதனை கண்காணிக்க மாநில எல்லையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு தினந்தோறும் வெளிமாநில மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை உதகை டிஎஸ்பி மகேஷ்வரன் தலைமையிலான தனி படை போலீசார் உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டி சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சுமார் 40 லிட்டர் கேரளா மாநில மதுபானம் இருந்தது கண்டுபிடித்தனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மதுபானம் எடுத்து வந்த வாகனம் மற்றும் ஓட்டுனர் விஜய் கைது செய்து புதுமந்து காவல் துறையினருடன் ஒப்படைத்தனர்.

Views: - 122

0

0