அரசு செவிலியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு

20 January 2021, 2:21 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசு செவிலியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி வெண்ணிலா நகரை சேர்ந்தவர் நிவேதிதா. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நிவேதிதா வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார். இந்த திருட்டு சம்பவம் குறித்து நிவேதிதா உருளையான்பேட் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பெயரில் கோவிந்தசாலை சேர்ந்த மைக்கல் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0