கர்நடகாவில் இருந்து கடத்தி வந்த 442 மதுபாட்டில்கள் வேனுடன் பறிமுதல்: கடத்தலில் ஈடுப்பட்ட வாலிபர் கைது…

10 May 2021, 6:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கர்நடகாவில் இருந்து கடத்தி வந்த 442மதுபாட்டில்கள் வேனுடன் போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் காவல் நிலைய போலீசார் இன்று எடையூர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் கர்நடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 442 குவார்ட்டர் மதுபாட்டில்கள் இருந்தது. மேலும் அதே ஊரைச்சேர்ந்த கண்ணன் மகன் ராஜகுமாரன் என்பவர் ஊரடங்கினையொட்டி சொந்த ஊருக்கு வந்த அவர், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சரக்கு வேனுடன் 442 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் மதுபாட்டில்களை கடத்தி வந்த ராஜகுமாரன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரை சிறையில் அடைத்தனர்.

Views: - 145

0

0