புதுச்சேரியில் 493 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

22 September 2020, 4:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 493 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 23684 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 300க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி,புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 493 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. அதில் புதுச்சேரியில் 407 நபர்களுக்கும், காரைக்காலில் 53 நபர்களுக்கும், ஏனாமில் 29 நபர்களுக்கும் மாஹேவில் 4 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,757 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23,684 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 5 நபர்களும், ஏனாமில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23,684 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 10

0

0